வெங்காயத்தை உணவில் சேர்ப்பதால் உடலிற்கு என்ன நன்மைகள் கிடைக்கும்?? வாங்க தெரிந்து கொள்ளலாம்..

by Logeswari, Dec 14, 2020, 17:26 PM IST

என்ன எல்லோரும் தலைப்பை பார்த்து என்னவாக இருக்கும் என்று யோசித்து கொண்டு இருக்கிறீர்களா??வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் அதிக பலம், சக்தி, நீண்ட ஆயுள் காலம் ஆகியவை கிடைக்கும். வெங்காயம் இல்லை என்றால் சமையல் செய்ய முடியாது. அது போல உடலிற்கு வெங்காயத்தின் பயன் கிடைக்காவிட்டால் பல பிரச்சனைகளை உண்டாக்கும். வெங்காயத்தில் கிடைக்கும் முழு சத்தையும் பெற வேண்டும் என்றால் தினமும் வெங்காயம் சாப்பிட பழகிகொள்ளுங்கள்.. மேலும் வெங்காயம் நம் உடலில் எவ்வகை நல்லது செய்கிறது என்பதை பார்ப்போமா..

குழந்தைகளுக்கு வெங்காயத்தை சாப்பிட பிடிக்காது அவர்களுக்கு வெங்காயத்தை அரைத்து சமையலில் சேர்க்கலாம். வெங்காயத்தில் கெட்ட கொழுப்பை குறைக்கும் வல்லமை கொண்டது. இதனால் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து இரத்த ஓட்டத்தை சீர் செய்து மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

ஒரு ஆராய்ச்சியில் சுகாதாரத்துறை கூறியுள்ளதாவது:- தினமும் உணவில் கலந்த வெங்காயத்தை உண்பதால் எலும்பு வலிமை பெறுகிறதாம்.. ஒரு வெங்காயத்தில் 25.3 மி.கி கால்சியம் உள்ளது. வெங்காயம் உண்பதால் வலுவிழந்த எலும்புகள் முழு சக்தியையும் பெற்று வலிமை பெறுகிறது. பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் புற்று நோயை அழிக்கும் சக்தி உள்ளது.

வெங்காயத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் கே உள்ளது. முகத்திற்கு தேவையான எல்லா வைட்டமின்களும் உள்ளதால் முகத்தில் உள்ள சருமம் ஈரப்பதம் அடைந்து முகம் மென்மையாகவும், பொலிவாகவும் இருக்க உதவுகிறது. ஆதலால் முகம் பொலிவாக வேண்டும் என்றால் வெங்காயத்தை தவிர்க்காமல் உண்ணுங்கள்.. வெங்காயம் சாப்பிடுவதால் செரிமானத்தை ஊக்குவிக்கிறது. அது மட்டும் இல்லாமல் சர்க்கரையின் அளவை சீர் செய்யவும் உதவுகிறது..

You'r reading வெங்காயத்தை உணவில் சேர்ப்பதால் உடலிற்கு என்ன நன்மைகள் கிடைக்கும்?? வாங்க தெரிந்து கொள்ளலாம்.. Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை