இரவு சாப்பிட்ட பிறகு இதெல்லாம் கனவில் கூட நினைக்க கூடாதாம் ..!

by Logeswari, Dec 16, 2020, 17:25 PM IST

உடல் பருமனாக இருப்பவர்கள் எப்பாடுபட்டாவது தங்களின் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று தீவிரமாக உழைத்து கொண்டு இருப்பார்கள். ஆனால் அவர்கள் செய்கின்ற சிறு தப்பினால் உடல் எடையை குறைக்க முடியாமல் போய்விடுகிறது. எதை சாப்பிட வேண்டும், எந்த நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்பதை முதலில் தெளிவாய் அறிந்து கொண்டு அதன் பிறகு தீயாய் வேலையில் இறங்க வேண்டும். சரி வாங்க இரவு சாப்பிட்ட பிறகு என்ன செய்ய கூடாது என்பதை விரிவாக பார்க்கலாம்..

தினமும் இரவில் சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டியது அவசியம். உடலை குறைக்க நினைப்பவர்கள் இரவில் சத்ததான தானியங்கள் போன்ற உணவு வகையை சாப்பிடுவது நல்லது. நேரம் தாழ்த்தியோ அல்லது அதிக கொழுப்பு நிறைந்த உணவை சாப்பிட்டால் டயட் என்னும் சொல்லுக்கு அர்த்தமே இல்லாமல் போகிவிடும்.

உடலுக்கு முக்கிய தேவையான நார்சத்து, புரதம், வைட்டமின் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். நீங்கள் சரியான நேரத்தில் சாப்பிட்டால் கூட உடல் எடை குறையவில்லை என்றால் உங்கள் உணவு வழிமுறையில் தான் தவறு உள்ளது. ஆதலால் முடிந்த வரை ஆரோக்கிய உணவை சாப்பிடுங்கள். சரியான நேரம் சாப்பிடுவது போல சரியான நேரத்தில் தூங்கவும் வேண்டும். அதுவும் தினமும் 6 முதல் 7 மணி நேரம் தூக்கம் அவசியமானது. போதுமான தூக்கம் இல்லை என்றால் எடை அதிகரிப்புக்கு இதுவும் ஒரு வகையான காரணமாகும்.

அதுபோல சாப்பிட்ட உடனே படுக்கைக்கு செல்ல கூடாது. உணவு அருந்திய பிறகு ஒரு 30 நிமிடம் கழித்து தான் தூங்க வேண்டும். சிறிது நேரம் உட்கார்ந்து டிவி பார்க்கலாம் அல்லது ஒரு சிறிய நடைபயிற்சி மேற்க்கொன்டால் உடல் பருமனை குறைக்க எளிதாகும்.

முக்கிய அறிவிப்பு:-
இரவு டின்னர் முடித்தவுடன் வேறு எந்த உணவும் சாப்பிடக் கூடாது என்பதை மனதில் பதியவைத்து கொள்ளுங்கள்...

You'r reading இரவு சாப்பிட்ட பிறகு இதெல்லாம் கனவில் கூட நினைக்க கூடாதாம் ..! Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை