பெருங்காய நீர் பருகுவதால் உடலில் பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுமாம்..!

by Logeswari, Dec 17, 2020, 18:56 PM IST

பெருங்காயத்தில் இயற்கையாகவே நன்மை குணம் உள்ளதால் தினமும் சமையலில் சேர்த்து கொள்கிறோம். இத்தகைய மணம் பொருந்திய பெருங்காயத்தை தாளிக்கும் பொழுது பயன்படுத்துவார்கள். நம் இந்தியா நாட்டில் சமைக்கும் எல்லா இடத்திலும் பெருங்காயம் இடம் பெறும்.இதில் நார்சத்து, கால்சியம், இரும்புசத்து ஆகியவை அதிகம் உள்ளதால் பெருங்காயத்தின் மகிமையும் அதிகம்.இதில் பல வகையான அயுர்வேத குணங்கள் நிரம்பியுள்ளது. தினமும் மதியம் உணவு உண்ட பிறகு ஒரு டம்ளர் தண்ணீரில் பெருங்காயத்தை கலக்கி குடித்து வந்தால் உடலில் உள்ள எல்லா நோய்களும் பறந்துவிடும். சமையலில் பெருங்காயம் சேர்ப்பதால் என்ன நன்மைகள் என்பதை பின்வருமாறு காணலாம்.

செரிமான பிரச்சனைக்கு தீர்வுக்காணல்:-
பெருங்காயம் கலந்த நீரை குடிப்பதால் உடல் சோர்வில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதுமட்டும் இல்லாமல் நாம் அசைவ உணவை சாப்பிட்டாலும் சீக்கிரம் செரிமானம் செய்கின்ற சக்தி பெருங்காயத்திற்கு உள்ளது. இதில் ஆக்ஸிஜனேற்ற பொருள்கள்கள் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியும் வளரும்..

பற்களில் இரத்த கசிவை கட்டுப்படுத்தும்:-
தினமும் தண்ணீரில் பெருங்காயம் சேர்த்து குடிப்பதால் உடலில் உள்ள 206 எலும்புகளை வலிமை செய்ய உதவுகிறது. பற்கள் உறுதியாக இல்லை என்றால் இரத்த கசிவு ஏற்படும். இதனை தடுத்து போராடும் வல்லமை பெருங்காயத்திற்கு உண்டு.. இறுதியில் பற்கள் வலிமை பெரும்..

இரத்த சோகையை சீர் செய்தல்:-
உடலில் சிவப்பு அணுக்கள் குறைவாக இருந்தால் பெருங்காயம் அதனை சரி செய்து இரத்த சோகையில் இருந்து குணப்படுத்தும். மேலும் அதிக இயற்கை குணம் நிறைந்து உள்ளதால் உடல் ஆரோக்கியம் அடையும்..

You'r reading பெருங்காய நீர் பருகுவதால் உடலில் பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுமாம்..! Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை