கலக்கலான தக்காளி தொக்கு செய்வது எப்படி??

Advertisement

தக்காளி தொக்கு பத்தே நிமிஷத்தில் செய்யக் கூடிய ஒரு சிம்பிளான, சுவையான உணவு வகை.. இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் ஆகும். வீட்டில் காய்கறிகள் இல்லாத வேளையில் வெறும் தக்காளி மற்றும் வெங்காயத்தை வைத்து இந்த ரெசிபியை ஈசியாக செய்து விடலாம்.. இது சப்பாத்திக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். சரி வாங்கச் சுவையான தக்காளி தொக்கு எப்படிச் செய்வது என்பதைப் பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:- எண்ணெய் - 3-4 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
வெங்காயம் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
மல்லித் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு

செய்முறை:- அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, சூடான பிறகு அதில் கடுகு, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவை சேர்த்துத் தாளித்துக் கொள்ளவும்.பின்னர் அதில் வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

பச்சை வாசனை சென்ற உடன் அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், மிளகாய் தூள் ஆகியவை சேர்த்து நன்றாகக் கிளறி விட வேண்டும். பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.

10 நிமிடம் கழித்து தொக்கை எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கும் அப்பொழுது அடுப்பை அணைத்துவிட்டு கடைசியில் கறிவேப்பிலை சேர்த்து தக்காளி தொக்கை இறக்கி விட வேண்டும். இந்த சுவையான தக்காளி தொக்குடன் சப்பாத்தி வைத்துச் சாப்பிட்டால் கலக்கல் டேஸ்ட்டாக இருக்கும்..

Advertisement
மேலும் செய்திகள்
how-to-cook-andra-pepper-chicken
காரசாரமான சுவையான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் ரெசிபி..! சூப்பர் டேஸ்ட்.. மிஸ் பண்ணிடாதீங்க
how-to-make-kovaikkai-masalapath-recipe
சுவையான கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி?? வாங்க பார்க்கலாம்..
how-to-cook-cauliflower-soup
அருமையான வெயிட் லாஸ் ட்ரிங்க்! காலிஃபிளவர் சூப் செய்வது எப்படி? வாங்க சமைக்கலாம்..
how-to-make-saththu-mavu
இனி வீட்டிலே சத்துமாவு தயாரிக்கலாம்! கெமிக்கல் கலந்த மாவுக்கு குட்பை சொல்லுங்கள்..
how-to-make-pepper-chicken
காரசாரமான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி??
how-to-make-ragi-samiya-cutlet
சுவையான ராகி சேமியா கட்லெட் செய்வது எப்படி??
how-to-make-rava-potato-finger-fry
சுவையான.. கிரிஸ்பியான.. ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரை செய்வது எப்படி?
how-to-make-cucumber-pachadi
உடல் எப்பொழுதும் குளு குளுன்னு இருக்க இதை சாப்பிடுங்க..!
how-to-make-neem-tea
சர்க்கரை நோய் முழுவதும் குணமாக வேப்பம் டீ குடியுங்க..
how-to-make-capsicum
சப்பாத்திக்கு ஏற்ற குடைமிளகாய் தொக்கு செய்வது எப்படி??

READ MORE ABOUT :

/body>