இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் இருப்பதால், பலருக்கும் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, வேலைப்பளு அதிகமாக இருப்பதால், பலரும் தண்ணீர் சரியாக குடிப்பதில்லை. இதனால் கண்கள் வறட்சியடைந்து, அதன் காரணமாக பல பிரச்சனைகள் கண்களில் ஏற்படுகிறது.
இந்த பிரச்சனைகளை எல்லாம் தவிர்க்க வேண்டுமெனில், தண்ணீர் அதிகம் குடிப்பதோடு, ஒருசில காய்கறிகளை அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டும். கண்களை பாதுகாக்கும் வழிகள் பற்றிக் காண்போம்.
டிவி பார்க்கும் போது இருட்டு அறையில் பார்க்காமல் திரைக்கு பின் ஏதேனும் ஒரு ஒலி இருக்கும்படி கவனித்துக் கொள்ளவும்.
கான்டேக்ட் லென்ஸ் அல்லது கண்ணாடிகளை தேவைக்கு ஏற்ப உபயோகிக்கவும். கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும்போது சிறு சிறு இடைவேளைகள் எடுத்துக்கொள்வது அவசியம்.
கம்ப்யூட்டர் மானிட்டரை கண்பார்வைக் கோட்டிற்கு கீழ் அமையும்படி பார்த்துக் கொள்ளவும். கண் கூசும் வெளிச்சத்திலும், மங்கலான வெளிச்சத்திலும், பொருட்களை உற்று பார்க்கக்கூடாது.
கண்ணில் நீர் வடிந்தால், கண்களை கசக்கக்கூடாது. கண் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
தூரத்தில் இருக்கும் பொருட்களை அதிக நேரம் உற்றுப் பார்க்கக்கூடாது. தூசி, புகை, அதிக சூரிய வெளிச்சம், அடர் காற்று ஆகியவற்றிலிருந்து கண்களை பாதுகாப்பது அவசியம்.
நாளொன்றுக்கு 10 முறை கண்ணை மேல், கீழ், பக்கவாட்டுகளில் அசைத்து, பயிற்சி செய்து வர கண் தெளிவாக இருக்கும். குடல் சுத்தமாக இருந்தால், கண் பார்வையும் தெளிவாக இருக்கும்.
கண்களைப் பாதுகாக்க ஊட்டச்சத்து மிகவும் அவசியம். காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, இ, இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ள உணவுப்பொருட்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.
அகத்திக்கீரை, பசலைக்கீரை, முருங்கை, பொன்னாங்கண்ணி, முளைக்கீரை, அரைக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி12 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.