வாண வேடிக்கை காட்டிய சுனில் நரைன் - கொல்கத்தா அணி அபார த்ரில் வெற்றி

சுனில் நரைனின் அதிரடி அரைச்சதத்தால் பெங்களூரு அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

by Lenin, Apr 9, 2018, 13:42 PM IST

சுனில் நரைனின் அதிரடி அரைச்சதத்தால் பெங்களூரு அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

ஐபிஎல் 2018 தொடரின் 3ஆவது போட்டி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. விராட் கோலியின் அதிரடி படைக்கு எதிராக, தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் தனது படையுடன் களமிறங்கினார்.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் மெக்கல்லம் 27 பந்துகளில் 43 ரன்களும், ஏபி டி வில்லியர்ஸ் 23 பந்துகளில் [4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி] 44 ரன்களும் குவித்தனர். கடைதி கட்டத்தில் அதிரடியாக ஆடிய மன்தீப் சிங் 18 பந்துகளில் [2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்] 37 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரைன் 17 பந்துகளில் [5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்] அரைச்சதம் கடந்தார். இது ஐபிஎல் போட்டிகளில் அடிக்கப்பட்ட நான்காவது அதிவேக அரைச் சதமாகும். இதனால், கொல்கத்தா அணி 5 ஓவர்களில் 65 ரன்களை கடந்தது. பின்னர் 50 ரன்களில் சுனில் நரைன் 50 ரன்களில் வெளியேறினார்.

இதற்கிடையில் கிறிஸ் லைன் 5 ரன்களிலும், ராபின் உத்தப்பா 13 ரன்களிலும் வெளியேறினார். ஆனால், நிதிஷ் ராணா மற்றும் தினேஷ் கார்த்திக் இணை ஆட்டத்தை பொறுப்புடன் எடுத்துச் சென்றது. ராணா 25 பந்துகளில் 34 எடுத்து வெளியேறினார். ஆனாலும், கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து தினேஷ் கார்த்திக் 29 பந்துகளில் 35 எடுத்து ஆட்டத்தை வெற்றிபெற செய்தார்.

இதனால், 18.5 ஓவர்களில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. ஆட்ட நாயகன் விருது அதிரடியாக அரைச்சதம் அடித்த சுனில் நரைனுக்கு வழக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading வாண வேடிக்கை காட்டிய சுனில் நரைன் - கொல்கத்தா அணி அபார த்ரில் வெற்றி Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை