நெருக்கடியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்… கம்-பேக் கொடுக்க உள்ளாரா கிளார்க்?

by Rahini A, Apr 9, 2018, 13:08 PM IST

ஆஸ்திரேலிய கிரிக்கெட் தற்போது நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் கிளார்க் திரும்பவும் கிரிக்கெட்டுக்கு கம்-பேக் கொடுக்க உள்ளாரா என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் ஸ்மித்,வார்னர் மற்றும் பேங்க்ராஃப்ட் ஆகியோர் விதிகளுக்கு புறம்பாக பந்தை சேதப்படுத்தி மாட்டிக் கொண்டனர். கிரிக்கெட் உலகமே கொந்தளித்த இந்த விஷயத்தில், மூவருக்கும் குறுகிய காலம் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து தடை விதித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.

அணியின் மூன்று முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில், ஆஸ்திரேலியா திணறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் கிளார்க் மீண்டும் கம்-பேக் கொடுக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இது குறித்து கிளார்க் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், `நான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம், அணிக்கு என்னால் முடிந்த அத்தனை உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளேன். இதற்கு, நான் திரும்ப கிரிக்கெட்டுக்கு கம்-பேக் கொடுக்க உள்ளேன் என்று அர்த்தம் கிடையாது. அது வெறும் வதந்தி’ என்று பதிவிட்டு தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading நெருக்கடியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்… கம்-பேக் கொடுக்க உள்ளாரா கிளார்க்? Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை