40 ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை என்ன? - ரஜினிக்கு தமிழிசை பிளாஷ்பேக்

Advertisement

40 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள், கன்னடர் ஒருவர் நடிப்பதைப் பார்க்க மாட்டோம் என நினைத்திருந்தால் நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்க முடியாது என்று தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா என்பவரை புதிய துணை வேந்தராக நியமிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முடிவு செய்திருப்பதாக வெளியான தகவல் பல்வேறு கல்வியாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதுதொடர்பாக பலர் கண்டனங்கள் எழுப்பி வருகின்றனர்.

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு எதிராக தமிழக மக்களும், விவசாயிகளும் போராடி வருகின்ற நிலையில், கர்நாடகாவை சேர்ந்த ஒருவரையே துணை வேந்தராக நியமிக்கப்பட்டிடுப்பது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதற்கிடையில், காவிரிப் பிரச்னை தமிழகத்தில் தீவிரமாகியுள்ள நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டது சரியல்ல என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் தமிழிசை செளந்தரராஜன் சென்னை வேளச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ”சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள், கன்னடர் ஒருவர் நடிப்பதைப் பார்க்க மாட்டோம் என நினைத்திருந்தால் நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்க முடியாது.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம், திறமை யாரிடம் இருந்தாலும் பெற்றுக்கொள்ளும். இதில், மத்திய அரசுமீது குறை சொல்வது கேலிக்கூத்து. ராணுவமே வந்தாலும் அஞ்ச மாட்டோம் என நடிகர் சத்யராஜ் பேசுகிறார். ஐ.டி ரெய்டு வந்தால் தெரியும் அவர்கள் பயப்படுவது.

காவிரி விவகாரத்தில் துரோகம் செய்துவிட்டு கைதானார் ஸ்டாலின். தியாகம் செய்துவிட்டு கைதாகவில்லை. பிரதமர் வருகைக்குக் கறுப்புக்கொடி காட்டும் ஸ்டாலின், தமிழினத் துரோகி. காங்கிரஸ், தி.மு.க ஆட்சியில் மறுக்கப்பட்ட காவிரியைக் கொண்டுவரப்போவது பாஜக தான். காவிரியைக் கொண்டுவர அவகாசம் தேவைப்படுவதால், அதுவரை ஸ்டாலின் சிறையில் இருக்கட்டும்" என்றார்.

 - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>