காவிரி மேலாண்மை வாரியம்: பறக்கும் ரயிலை மறித்து தேமுதிகவினர் போராட்டம்

Advertisement

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை பறக்கும் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட தேமுதிகவினரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசு காவரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மேலும் மூன்று மாதம் கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. நீதிமன்றம் விதித்த காலக்கெடுவை வீணடித்துவிட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

அதிமுக, பாஜகவை தவிர பெரும்பாலான கட்சிகள் போராட்டத்தில குதித்துள்ளன.
அந்த வகையில், இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாஸ்திரிபவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். முக்கொம்பு ஆற்றில் இறங்கி விவசாயிகள் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், சென்னை வேளச்சேரியில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, ரயில் நிலையத்திற்குள் சென்ற தேமுதிகவினர் பறக்கும் ரயிலை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 200க்கும் மேற்பட்ட தேமுதிக தொண்டர்களை கைது செய்தனர்.

 - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>