தினமும் சிறிதளவு இஞ்சி சாப்பிடுங்க.. ஆச்சர்யமூட்டும் மருத்துவ குணங்கள்..!

by Logeswari, Feb 12, 2021, 19:27 PM IST

10 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து வீடுகளிலும் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு படுக்கப்போகும் முன் இஞ்சி சாறு எடுத்து சுரசம் செய்து 10 மி.லி முதல் 30 மி.லி வரை குடிக்கும் பழக்கம் இருந்தது. அதாவது இஞ்சி சாறு எடுத்து தெளியவைத்து அடியில் படியும் வெள்ளை நிற மாவு பொருட்களை நீக்க வேண்டும். பின் அடுப்பில் ஏற்றி சுர் என்ற சத்தம் வந்தவுடன் அடுப்பை விட்டு இறக்கி பயன்படுத்துவதுதான் இஞ்சி சுரசம் எனப்படும். வாரம் தோறும் இஞ்சி சுரசம் குடித்து வருவதால் வயிற்றில் உள்ள வாயு, மலச்சிக்கல், வயிற்றில் தங்கிய பழைய மலம் முதலான அனைத்தும் மறுநாள் காலையில் வெளியேறிவிடும். உடலும் புத்துணர்ச்சி தரும், வயிற்றுப்போக்கு, இதய நோய்கள், வாத நோய்கள், தோல் நோய்கள் முதலானவை வராது. வாரம் தோறும் எண்ணெய் தேய்த்து குளித்தால் எந்த அளவுக்கு நன்மை கிடைக்குமோ அதே போன்று கண்டிப்பாக வாரந்தோறும் இஞ்சி சுரசம் குடித்து வரவேண்டும்.

இஞ்சியின் மேல் தோலை சீவி விட்டு வட்ட வடிவில் நறுக்கி வெயிலில் சிறிது நேரம் உலர்த்தி சம எடை தேனில் போட்டு 40 நாட்களுக்கு காற்று புகாமல் இஞ்சியையும் தேனையும் மூடி வைக்க வேண்டும் . பின்னர் திறந்து தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு துண்டு சாப்பிட்டு வர உடலில் புத்துணர்ச்சி ஏற்படும் இது ஒரு சிறந்த காயகல்ப முறையாகும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர மூப்புப் பிணிகள் வராது. இஞ்சியை தோல் சீவி வாயில் போட்டு மென்று உமிழ்நீரை துப்ப வேண்டும். இவ்வாறு செய்தால் தொண்டைப் போல், குரல் கம்மல் குணமாகும் .

சிலருக்கு காலையில் எழுந்தவுடன் அல்லது காலையில் பல் தேய்க்கும் போது கசப்பான பித்த மயக்கமாக வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும். அவ்வாறு உள்ளவர்கள் இஞ்சி சாறு 100 மில்லி, பசும்பால் 70 மில்லி, பணங்கற்கன்டு 100 கிராம் சேர்த்து அடுப்பில் வைத்து மணப்பாகு செய்து இரவு படுக்கப்போகும் முன் சாப்பிட்டு வர பித்த மயக்கம் முற்றிலும் குணமாகும்.

இஞ்சிச்சாறு, சின்னவெங்காயம், எலுமிச்சைச்சாறு இம்மூன்றும் கலந்து வைத்துக்கொண்டு 20 முதல் 30 மில்லி காலை இரவு உணவுக்கு பின் மூன்று நாட்கள் தொடர்ந்து உட்கொண்டு வர ஆஸ்துமா இருமல் குறையும்.
இவ்வாறு தனித்தனியாக செய்ய இயலாதவர்கள் இஞ்சி அதிகமாக சேர்த்து தயாரிக்கப்படும் கண்டாத்திரி லேகியத்தை நாட்டு மருந்து கடைகளில் அல்லது சித்த மருத்துவ கடைகளில் வாங்கி பயன்படுத்தி பயன்பெறலாம்.

You'r reading தினமும் சிறிதளவு இஞ்சி சாப்பிடுங்க.. ஆச்சர்யமூட்டும் மருத்துவ குணங்கள்..! Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை