பீரியட்ஸுக்கு முந்தைய பிரச்னை: கடந்து வருவது எப்படி?

by SAM ASIR, Mar 5, 2021, 21:18 PM IST

பெண்களுக்குப் பெரிய பிரச்னை தரும் நாள்கள் மாதவிடாய் காலமாகும். மாதவிடாய்க்கு முந்தைய காலத்தில் மார்பகங்களில் வலி, மனப்போக்கில் மாற்றம், உணவுகளின்மேல் நாட்டம், எரிச்சல் மற்றும் மனச்சோர்வு ஆகிய பாதிப்புகளை பெண்கள் அனுபவிக்கின்றனர். இது பிஎம்எஸ் (ப்ரீமென்சுரல் சிண்ட்ரோம்) என்று கூறப்படுகிறது. சில உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்னையின் தீவிரத்தை குறைக்கலாம்.

மெக்னீசியம்
மெக்னீசியம் என்னும் தாது, தசைகளை தளரச் செய்கிறது. அதன் காரணமாக மாதவிடாய் கால தசை இறுக்கத்தை தணிக்கிறது. கீரைகள், அல்மாண்ட், வேர்க்கடலை, முழு தானியங்கள், பருப்பு வகைகளை அதிகமாக சாப்பிடவேண்டும்.

வைட்டமின் பி6
வைட்டமின் பி6 (பைரிடாக்ஸின்) ஓட்ஸ், வாழைப்பழம், மீன், கோழியிறைச்சி, சோயாபீன்ஸ் மற்றும் வேர்க்கடலையில் உள்ளது. மெக்னீசியம், வைட்டமின் பி6 ஆகிய இரண்டு சத்துகளும் மாதவிடாய்க்கு முந்தைய பிரச்னைகளை குறைக்கிறது. அதிக அளவு பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதுடன் உப்பை குறைப்பது பயன் தரும். அதிக அளவு நீர் அருந்துவதும் மாதவிடாய் கால வேதனையை குறைக்க உதவும்.

You'r reading பீரியட்ஸுக்கு முந்தைய பிரச்னை: கடந்து வருவது எப்படி? Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை