டெலிகிராமில் சீக்ரெட் சாட்ஸில் என்னென்ன செய்ய முடியாது?

by SAM ASIR, Mar 5, 2021, 21:19 PM IST

சீக்ரெட் சாட்ஸ் என்னும் இரகசிய உரையாடல்களில் மட்டுமே செய்திகளை தானாகவே அழிந்துபோகும் (செல்ஃப் டெஸ்டிரக்ட்) வசதியை பயன்படுத்த முடியும். தானாகவே அழிந்துபோகும்படி நேரத்தை குறித்தால் அதை அழிப்பது குறித்து கவலைப்படவேண்டாம். செல்ஃப் டெஸ்டிரக்ட்டிங் வசதியை பயன்படுத்த, கிளாக் ஐகானை அழுத்தவும். 1 முதல் 15 விநாடிகள், 30 விநாடிகள், 1 நிமிடம், 1 மணி நேரம், 1 நாள் மற்றும் 1 வாரம் என்று நேரத்தை குறிப்பிடலாம். உரையாடலின் அடிப்பக்கம் அதற்கான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.

சீக்ரட் சாட்டில் போட்டோ
சீக்ரட் சாட்டில் அனுப்பப்படும் போட்டோக்களை சேமிக்கவோ, தரவிறக்கம் செய்யவோ, குறுஞ்செய்திகள் மற்றும் குரல் செய்திகளை சேமிக்கவோ முடியாது.

புரொஃபைல் பிக்சர்
டெலிகிராமில் உள்ள புரொஃபைல் படத்தில் பிக்சர் கார்ட் பயன்படுத்தப்பட்டிருந்தால் ஸ்கிரீன்ஷாட் எடுக்கவோ தரவிறக்கம் செய்யவோ முடியாது. வேறொரு போன் அல்லது காமிரா பயன்படுத்தி வேண்டுமானால் புகைப்படம் எடுக்கலாம்.

பேக்அப்
சீக்ரட் சாட் மூலம் பகிரப்படும் அரட்டைகளை பேக்அப் எடுக்கவே முடியாது. ஆனால் சாதாரண உரையாடல்களை பேக்அப் எடுக்கலாம்; எக்ஸ்போர்ட் செய்யலாம்.

சாட் ஹிஸ்டரி
டெலிகிராம் செயலியில், சாட்டின்மேல் இடப்பக்கம் தள்ளினால் '....' என்ற பிரிவை தெரிவு செய்து, எக்ஸ்போர்ட் சாட் கட்டளை கொடுக்கவேண்டும். அப்போது மெசேஜ், அவற்றின் அசல் நேர விவரத்தோடு பதிவிறக்கம் ஆகும்.

போன் எண்
அலைபேசி எண் இல்லாமல் டெலிகிராம் கணக்கு தொடங்க இயலாது.

You'r reading டெலிகிராமில் சீக்ரெட் சாட்ஸில் என்னென்ன செய்ய முடியாது? Originally posted on The Subeditor Tamil

More Technology News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை