வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகளில் மாற்றத்தை அறிவித்ததும், டெலிகிராம், சிக்னல் இந்தச் செயலிகளை பரபரவென்று பலர் தங்கள் ஸ்மார்ட்போன்களில் டவுண்லோடு செய்து வருகின்றனர்.
வாட்ஸ்அப் செயலி தனியுரிமை கொள்கைகளில் மாற்றம் கொண்டு வந்ததன் காரணமாக பயனடைந்து வரும் செய்தி செயலிகளுள் ஒன்று டெலிகிராம் (Telegram) ஆகும்.
'கிளவுட்' தொழில்நுட்ப அடிப்படையில் இயங்கும் செய்தி செயலியான டெலிகிராம் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் என்டி, மேக்ஓஎஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் செயல்படக்கூடிய செயலி இது.