சிக்னல், டெலிகிராம், வாட்ஸ்அப் மூன்று செயலிகள்: ஒற்றுமை - வேற்றுமை எவை?

Advertisement

வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகளில் மாற்றத்தை அறிவித்ததும், டெலிகிராம், சிக்னல் இந்தச் செயலிகளை பரபரவென்று பலர் தங்கள் ஸ்மார்ட்போன்களில் டவுண்லோடு செய்து வருகின்றனர். வாட்ஸ்அப் எப்படி செயல்படுகிறது? அதில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை அனைவரும் அறிந்திருக்கிறோம். ஆனால் டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிகள் கணினி மற்றும் மடிக்கணினியில் எப்படி செயல்படும் என்பதை பலரும் அறிந்திருக்கமாட்டோம்.

வெப் வெர்ஷன்
இணையத்தில் பிரௌசர் மூலம் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளை முறையே http://web.whatsapp.com/ http://web.telegram.org/ என்ற இணைப்புகள் மூலம் நேரடியாக பயன்படுத்த முடியும். ஆனால், சிக்னல் செயலியை கணினியில் டவுண்லோடு செய்தால் மட்டுமே இணையத்தில் பயன்படுத்த முடியும்.

தளம்
டெலிகிராம் எந்த தளத்திலும் (platform) செயல்படும். வாட்ஸ்அப் மற்றும் சிக்னல் இவற்றின் மேசை கணினி செயலிகள் விரிவாக்கம் (extension) மட்டுமே ஆகும். டெலிகிராம் கணினி மற்றும் மடிக்கணினியில் செயல்பட மொபைல் செயலிகளை சார்ந்தது அல்ல. பயனர்கள் பதிவு செய்து (sign up) லேப்டாப், டெஸ்க்டாப் மற்றும் மொபைல் எதில் வேண்டுமானாலும் பயன்படுத்த ஆரம்பிக்கலாம். ஆனா, வாட்ஸ்அப் மற்றும் சிக்னல் ஆகியவற்றுக்கு மொபைல் செயலி இருக்கவேண்டியது கட்டாயம். வாட்ஸ்அப் மற்றும் சிக்னல் செயலிகளை மேசை கணினியில் பயன்படுத்த பயனர்களின் ஸ்மார்ட்போன்கள் இணைய தொடர்பில் இருக்கவேண்டும்.

இயங்குதளம்
சிக்னல் மற்றும் டெலிகிராம் இரண்டும் லினக்ஸ் உள்ளிட்ட பல இயங்குதளங்களில் செயல்படும். வாட்ஸ்அப், லினக்ஸ் இயங்குதளத்தில் செயல்படாது.

அழைப்புகள்
டெலிகிராம் மற்றும் சிக்னல் ஆகியவற்றை மேசை கணினியில் பயன்படுத்தும்போது பயனர்கள் அழைப்புகளை எடுத்து பேச முடியும். மேசை கணினி அழைப்பு வசதி இன்னும் வாட்ஸ்அப்பில் செய்யப்படவில்லை. டெலிகிராம் மற்றும் சிக்னல் ஆகியவற்றை பயன்படுத்துவோர் தொலைபேசி மூலம் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். வாட்ஸ்அப்பை பொறுத்தமட்டில் வீட்டா (beta) பயனர்கள் மட்டுமே இதை சோதனை அளவில் செய்யமுடியும்.

தொடர்பு வட்டம்
வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் ஆகிய மூன்று செயலிகளுமே மேசை கணினியில் தொடர்புகள் மற்றும் செய்திகளை ஒருங்கிணைக்கும் (sync) வசதியை கொண்டுள்ளன.

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!

READ MORE ABOUT :

/body>