வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகளில் மாற்றத்தை அறிவித்ததும், டெலிகிராம், சிக்னல் இந்தச் செயலிகளை பரபரவென்று பலர் தங்கள் ஸ்மார்ட்போன்களில் டவுண்லோடு செய்து வருகின்றனர்.
வாட்ஸ்அப் செயலி தனியுரிமை கொள்கைகளில் மாற்றம் கொண்டு வந்ததன் காரணமாக பயனடைந்து வரும் செய்தி செயலிகளுள் ஒன்று டெலிகிராம் (Telegram) ஆகும்.
வாட்ஸ்அப் செயலி இப்போது வரை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் புதிதாக கொண்டு வந்துள்ள தனியுரிமை கொள்கைகளை முன்னிட்டு பலர் வேறு செயலியை பயன்படுத்துவது குறித்து யோசித்து வருகிறார்கள்.
வாட்ஸ் அப் செயலியின் புதிய நிபந்தனைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உலகம் முழுவதும் ஏராளமானோர் சிக்னல் என்ற செயலிக்கு மாறி வருகின்றனர்.பிரையன் அக்டன் மற்றும் ஜான் கௌம் ஆகிய இருவரும் இணைந்து 2009ம் ஆண்டு தொடங்கிய செயலி தான் வாட்ஸ்அப்.
வாட்ஸ்அப்பின் புதிய விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை வரும் பிப்ரவரி 8, 2021 முதல் நடைமுறைக்கு வரும். அதன்பிறகு பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்திக் கொள்ள இந்த விதிமுறைகளையும் மாற்றங்களையும் ஏற்க வேண்டும்.
வாட்ஸ்அப் தொடர்பான தொழில்நுட்ப வலைப்பதிவு கண்காணிப்பு தகவலின் அறிக்கையின் படி, ஒரே கணக்கை ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களில் செயல்படுத்துவது என்பது குறித்துக் கடந்த வாரம் முதல் வாட்ஸ்அப் நிறுவனம் பரிசோதித்து வருகிறது. வாட்ஸ்அப் இதில் தீவிரமாக உள்ளதால் விரைவில் இந்த அம்சத்தை வெளியிடக்கூடும் .
வரும் ஜனவரி 1 முதல் சில குறிப்பிட்ட ரக ஸ்மார்ட் போன்களில் மட்டும் வாட்ஸ் அப் செயலி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்தும் செயல்களில் ஒன்று வாட்ஸ்அப். ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களின் 90 முதல் 95 சதவீதம் வரை வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்தியாவில் பெரும்பாலானோர் பயன்படுத்துகிற செய்தி செயலி வாட்ஸ்அப் ஆகும். வாட்ஸ்அப்பில் பல வசதிகள் இருந்தாலும் பயனர்கள் எப்போதும் கூடுதலான வசதிகளை எதிர்பார்ப்பது, தேடுவது வழக்கம்.
வாட்ஸ்அப் செயலியில் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் சில வசதிகள் மேசை கணினி பயன்பாட்டிலும் வர இருப்பதாக தகவல்கள் மூலம் தெரிய வருகிறது.
வாட்ஸ்அப் செயலி, பண பரிவர்த்தனைக்கான அனுமதியை கோரியிருந்தது. கடந்த நவம்பர் மாதம் தேசிய பணப்பட்டுவாடா கழகம் இதற்கான அனுமதியை வழங்கியது.