வாட்ஸ் அப் பயனர்களுக்கு நல்ல செய்தி: வீடியோவை மியூட் செய்து அனுப்பும் வசதியை சோதனை முறையில் வாட்ஸ் அப் அறிமுகம்.!!!

by Sasitharan, Feb 8, 2021, 20:14 PM IST

சென்னை: வீடியோ காட்சியே மற்றவர்களுக்கு பகிரும்போது அதன் ஆடியோவை மியூட் செய்து அனுப்பும் புதிய வசதியை சோதனை முறையில் வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆயிரம் சொன்னாலும், தற்போது டிஜிட்டல் உலகில் வாட்ஸ் அப் தான் ராஜாவாக வலம் வருகிறது. இதற்கு ஏற்ப, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளை கொடுத்து வருகிறது. இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீடியோ பகிரும்போது முறையில் புதிய அப்டேட்டை கொண்டு வர வாட்ஸ் அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது வீடியோவை மற்றவருக்கு பகிரும்போது அதன் ஆடியோ அளவை மியூட் செய்து அனுப்பும் புதிய வசதியை கொண்டு வரவுள்ளது.

வீடியோ அனுப்பும் முன்பே அதற்கு ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஆடியோவை மியூட் செய்து அனுப்ப முடியும். தற்போது இந்த அப்டேட்டை பீட்டா வெர்சன்களில் சோதனை முறையில் வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனுடன், எமோஜி வைப்பது, டெக்ஸ்ட் வைப்பது, எடிட் செய்யும் வசதிகளையும் இணைத்துள்ளது. தற்போது 2.21.3.13 வெர்ஷன் வகை பீட்டாவில் இந்த புதிய வசதியான மியூட் ஆடியோ வீடியோ கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், வெற்றி ஏனில், விரைவில், அனைத்து வித வாடிக்கையாளர்களுக்கும் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

You'r reading வாட்ஸ் அப் பயனர்களுக்கு நல்ல செய்தி: வீடியோவை மியூட் செய்து அனுப்பும் வசதியை சோதனை முறையில் வாட்ஸ் அப் அறிமுகம்.!!! Originally posted on The Subeditor Tamil

More Technology News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை