வாட்ஸ்அப்பில் இல்லை சிக்னலில் உண்டு. அந்த விஷயங்கள் எவை?

by SAM ASIR, Jan 20, 2021, 20:47 PM IST

ஃபேஸ்புக், விளம்பரங்களை காட்டுவதற்கு பயனர் தரவுகளை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கும்வண்ணம் வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகளை மாற்றியதால் பலரும் சிக்னல் என்னும் இன்னொரு மெசேஜிங் செயலிக்கு மாறி வருகின்றனர். வாட்ஸ்அப் நம்முடைய தகவல் பலவற்றை கேட்டுப்பெறுவது போல சிக்னல் செயலி பெறுவதில்லை என்பது ஒரு பெரிய நன்மை. வாட்ஸ்அப்புடன் ஒப்பிடும்போது சிக்னல் பயனர்களின் தனியுரிமைக்கு பங்கம் விளைவிப்பதில்லை.

உண்மை எண் தேவையில்லை
சிக்னல் செயலி உங்கள் தொடர்பு பட்டியலில் இருப்போரை தொடர்வதில்லை. உங்களது டிஜிட்டல் புரொஃபைலோடு சிக்னல் உங்கள் போன் எண்ணை இணைப்பதில்லை. ஆனால், முதலில் பதிவு செய்வதற்கு தொலைபேசி எண் தேவை. ஆனால் அதற்கு வெர்சுவல் என்னும் மெய்நிகர் எண் போதும். டெக்ஸ்ட்நவ் (TextNow) போன்று ஏதாவது ஒரு செயலியிலிருந்து எண்ணை பெற்று பயன்படுத்தி ஓடிபியை பெற்றுக்கொள்ளலாம். பதிவு செய்த பிறகு உங்கள் சிக்னல் கணக்கை பயன்படுத்த PIN போதும்.

உங்கள் போட்டோவை பயன்படுத்தவேண்டாம்
சிக்னல் செயலிக்கு பதிவு (signing up) செய்யும்போது உங்கள் உண்மையான புகைப்படத்தை டிஸ்ப்ளே படமாக வைக்கவேண்டாம். தனியுரிமையை காப்பதற்காக உங்கள் உண்மையான பெயரையும் பயன்படுத்தவேண்டாம். இதை நீங்கள் வாட்ஸ்அப்பிலும் செய்யலாம். ஆனால், நீங்கள் நீண்டகாலமாக அதை பயன்படுத்தி வந்திருப்பதால் மெட்டா டேட்டா உங்கள் டிஜிட்டல் புரொஃபைலோடு இணைந்திருக்கும். ஆகவே, இப்போது நீங்கள் வாட்ஸ்அப்பில் அவற்றை மாற்றிலும் பெரிய தாக்கம் எதுவும் ஏற்படாது.

ரிஜிட்ரேஷன் லாக்
உங்கள் சிக்னல் கணக்கு உங்கள் போன் எண்ணோடு இணைக்கப்பட்டிருக்காது. உங்களுக்கு மட்டுமே தெரிந்த PIN உடன் மட்டுமே அது இணைந்திருக்கும். இதன் காரணமாக பயனரை கண்டுபிடிப்பது சிரமமானதாகிவிடும். பாதுகாப்பை இன்னும் அதிகரிக்க, பிரைவசி செட்டிங்ஸ் சென்று ரிஜிட்ரேஷன் லாக் என்பதை ஆன் செய்யவும். இது வேறு சாதனத்திலிருந்து உங்கள் சிக்னல் கணக்கை பயன்படுத்துவதை தடுக்கும்.

தொடர்பில் இருப்போரின் படங்கள்
'அப்பியரன்ஸ் செட்டிங்ஸ்' என்னும் பகுதியில் 'யூஸ் சிஸ்டம் காண்டாக்ட் போட்டோஸ்' என்னும் கட்டளையை செயலற்றதாக்கவும் (disable). இதன் மூலம் உங்கள் தொடர்பு பட்டியலில் உள்ளோரின் படங்களை சிக்னலில் காட்டப்படுவதை தவிர்க்கலாம்.

ஐபி அட்ரஸ்
பிரைவசி செட்டிங்ஸ் என்ற பகுதியில் 'ரீட் ரிசிப்ட்ஸ்' என்ற கட்டளையை செயலற்றதாக்கவும் (disable). 'ஆல்வேஸ் ரிலே கால்ஸ்' என்பதை தெரிவு செய்யவும். இது உங்கள் தொடர்பிலிருப்போர் உங்கள் ஐபி முகவரியை தெரிந்துகொள்வதை தடுக்கும். மெட்டாடேட்டா தகவல் பகிர்வை தடுப்பதற்கு 'ரீட் ரிசிப்ட்ஸ்' என்பதை ஆஃப் செய்யவும்.

ஐபோன் பயனர்
நீங்கள் ஐபோன் பயன்படுத்தினால் பிரைவசி செட்டிங்ஸ் சென்று 'ஷோ கால்ஸ் இன் ரீசன்ட்' என்ற தெரிவை செயலற்றதாக்கவும் (disable). இப்படி செய்தால் வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகள் அழைப்பு பட்டியலில் காட்டப்படுவதை தவிர்க்கலாம்.

ஸ்கிரீன் டைம் அவுட்
ஸ்கிரீன் டைம் அவுட் என்பதை 1 நிமிடமாக வரையறுக்கவும். மற்றவர்கள் உங்கள் சிக்னல் செயலி உரையாடலை பார்ப்பதை இது தவிர்க்கும்.

அறிமுகமில்லாதவர்களை தவிர்ப்பதற்கு
அறிமுகமில்லாதவர்கள் உங்களை சிக்னல் செயலி மூலம் தொடர்பு கொள்வதை தவிர்ப்பதற்கு பிரைவசி செட்டிங்ஸ் சென்று 'அலவ் பிரம் எனிஒன்' என்ற தெரிவை செயலற்றதாக்கவும் (disable).

அதிகமான பாதுகாப்பு
தனியுரிமையை இன்னும் அதிகரிக்க அட்வான்ஸ்ட் செட்டிங்ஸ் என்ற பகுதியில் 'டீபக் லாக்' என்ற தெரிவை செயலற்றதாக்கவும் (disable).

எண்ணை சோதிக்கவும்
சிக்னல் செயலி மூலம் ஒருவரிடம் அரட்டையில் ஈடுபடும் முன்னர் தொடர்பு எண்ணை சோதிக்கவும் (verify).

டிஸ்ஸப்பியரிங் மெசேஜ்
வாட்ஸ்அப்புடன் ஒப்பிடும்போது டிஸ்ஸப்பியரிங் மெசேஜ் வசதி சிக்னலில் நன்கு செயல்படுகிறது. அரட்டையில் ஈடுபடும் ஒருவர் இந்த வசதியை தெரிவு செய்திருந்தாலும், மற்றவரும் அதை பின்பற்றவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நீங்கள் டிஸ்ஸப்பிரியங் என்னும் செய்தி மறைவுக்கான நேரத்தை குறைந்தது 5 நொடியாக வரையறுக்கவும். நீங்கள் 5 நொடி அந்தச் செய்தியை பார்த்ததும் அது தானாகவே மறைந்துவிடும்.

You'r reading வாட்ஸ்அப்பில் இல்லை சிக்னலில் உண்டு. அந்த விஷயங்கள் எவை? Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை