புதிய கொள்கை தொடர்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிஜிட்டர் உலகளில் முன்னணி செயலியான வாட்ஸ்அப் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை அறிமுகம் படுத்தி வருகிறது. வாட்ஸ்அப் இல்லாத ஸ்மார்ட் போன் இல்லாத நிலைதான் தற்போது உள்ளது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய கொள்கைகளை வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்தது. இதனால், தங்கள் தகவல் வெளியாகிவிடும் என்று அஞ்சி பலர் வாட்ஸ் அப் செயலியை விட்டு வெளியேறினர். இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மத்திய அரசு வாட்ஸ்அப் நிறுவனத்திடம் இதுகுறித்த தகவல்களை கேட்டுப்பெறலாம் என சொல்லப்பட்டு வந்தது. இதனிடையே, புதிய கொள்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது.
வாட்ஸ் அப்பின் புதிய பிரைவேஸி கொள்கைகளை செயல்படுத்த தடை விதிக்கக்கோரி டெல்லி கர்மான்யா சிங் செரீன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த பொதுநல வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, தனிப்பட்ட தகவல்களை மக்கள் பெரிதாக கருதுகின்றனர். 4 ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் இருக்காலம். ஆனால், தங்களுக்கு மக்களின் தகவல் பாதுகாப்பே முக்கியம். வாடிக்கையாளர்கள் தகவல்களை காப்பது நமது கடமை என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கு குறித்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.