வாட்ஸ்அப் செயலியின் புதிய தனியுரிமை கொள்கையால் பயனர்கள் அநேகர் வெவ்வேறு குறுஞ்செய்தி தளங்களுக்கு மாறி வருகின்றனர். சிக்னல் மற்றும் டெலிகிராம் ஆகிய இரண்டு மெசேஜிங் தளங்களுமே அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 5 நாள்களில் டெலிகிராம் 5 கோடியே 60 லட்சம் முறையும், சிக்னல் 7 கோடியே 50 லட்சம் முறையும் டவுண்லோடு செய்யப்பட்டுள்ளன. டெலிகிராம், கிளவுட் அடிப்படையிலான மெசேஜிங் செயலியாகும். ஆகவே, இரண்டு அடுக்கு பாதுகாப்பு வழிமுறையை பயன்படுத்தினால் நன்று. இதை எளிதாக செய்யலாம். உங்கள் ஸ்மார்ட்போனில் டெலிகிராம் செயலியை திறக்கவும்.
இடப்பக்கமாக அழுத்தி தள்ளி (swipe)அல்லது ஹாம்பர்கர் ஐகானை அழுத்தி பட்டியை(menu)திறக்கவும். பிறகு செட்டிங்ஸ் பகுதிக்குச் செல்லவும். செட்டிங்ஸ் பகுதியில் பிரைவசி மற்றும் செக்யூரிட்டி என்பதை தெரிவு செய்யவும். இதில் இரண்டு அடுக்கு சோதனையை (Two-Step Verification)தெரிவு செய்யவும். இப்போது செயலி கூடுதல் கடவுச் சொல்லை(பாஸ்வேர்டு)உருவாக்குமாறு கேட்கும். கடவுச்சொல்லை (பாஸ்வேர்டு) உள்ளிட்டதும், பாஸ்வேர்டுக்கான குறிப்பு (ஹிண்ட்) மற்றும் மீளப்பெறுவதற்கு மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவேண்டும். இப்போது டெலிகிராமால் ஒரு குறியீடு (code) அனுப்பப்படும். இரண்டு அடுக்கு வெரிஃபிகேஷனை நிறைவு செய்ய இந்த குறியீட்டை உள்ளிடவேண்டும்.