'நட்ஸ்' எனப்படும் கொட்டை வகை தாவர விளைபொருள்கள் ஊட்டச்சத்துகள் அடங்கியவை. இவற்றிலுள்ள ஊட்டச்சத்துகள் நீரிழிவு (சர்க்கரைநோய்) பாதிப்புள்ளோருக்கு உடல் நலத்திற்கான நன்மைகளை தரக்கூடியவை. தினமும் 'நட்ஸ்' சாப்பிடுவது குறிப்பிட்ட இதய கோளாறுகள், போதிய இன்சுலின் சுரக்காமையால் ஏற்படும் இரண்டாம் வகை நீரிழிவு மற்றும் வளர்சிதை (மெட்டாபாலிக்) குறைபாடுகளை தடுக்கும். நீரிழிவு பாதிப்புள்ளோர் சாப்பிடக்கூடிய 'நட்ஸ்' வகைகள்
அல்மாண்ட்
நீரிழிவு பாதிப்புள்ளவரின் உடலிலுள்ள குளூக்கோஸின் அளவை பராமரிக்க அல்மாண்ட் உதவுகிறது. நம் உடலுக்கு தீமை விளைவிக்கும் நிலையற்ற அணுக்கள் (ஃப்ரீ ராடிகல்ஸ்) மற்றும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் (ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள்) இவற்றுக்கு இடையேயான விகிதமே ஆக்ஸிடேடிவ் ஸ்டிரெஸ் ஆகும். இதுவே நீரிழிவுக்கும் இதய கோளாறுகளுக்கும் காரணமாகிறது. அல்மாண்ட், நம் உடலிலுள்ள ஆக்ஸிடேடிவ் ஸ்டிரெஸை குறைக்கிறது.
பிஸ்தா
பிஸ்தாவில் உடலுக்கு ஆற்றல் அளிக்கும் சத்துகள் உள்ளன. நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் இரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்க பிஸ்தா உதவுகிறது. உப்பிடப்படாத பிஸ்தாவை சாப்பிடலாம். பிஸ்தாவில் நார்ச்சத்து அதிகம். இது உணவு எளிதாக செரிமானம் ஆக உதவுகிறது. வளர்சிதை (மெட்டாபாலிசம்) மாற்றத்தை ஊக்குவிக்கிறது. வயிற்றை திருப்தியாக உணர வைக்கிறது. இதில் புரதம் அதிகம். ஆரோக்கியமான கொழுப்பான மானோசாச்சுரேட்டட் ஃபேட்ஸ், பிஸ்தாவில் உள்ளது. இது உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது.
வேர்க்கடலை
தாராளமாக கிடைக்கக்கூடிய வேர்க்கடலை (நிலக்கடலை) ஊட்டச்சத்துகள் அடங்கியது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கக்கூடிய இயல்பு வேர்க்கடலைக்கு உள்ளது.
முந்திரி பருப்பு
'கேஷூஸ்' என்று கூறப்படும் முந்திரி பருப்பில் கொழுப்பு குறைவு. இது உடல் எடையிலோ, இரத்த சர்க்கரை அளவிலோ எதிர்மறை மாற்றங்களை உண்டுபண்ணுவதில்லை. முந்திரி பருப்பில் மெக்னீசியம் சத்து அதிகம் உள்ளது.