பார்வை திறனை பாதுகாக்க எவற்றை சாப்பிடவேண்டும் தெரியுமா?

by SAM ASIR, Mar 20, 2021, 23:04 PM IST

கண்கள் நமக்கு அழகு சேர்ப்பவை மட்டுமல்ல; அவை மிகவும் முக்கியமான உறுப்புகளுமாகும். கண்களின் பார்வை திறனை நாம் பாதுகாக்கவேண்டும். அதற்கு உரிய உணவுகளை சாப்பிடுவதோடு, கண்களை பாதிக்கும் செயல்களில் ஈடுபடாமலும் இருக்கவேண்டும்.


காரட்டுகள் மட்டுமன்றி பீட்டா கரோடின் இருக்கக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளும் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடியவை. பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ ஊட்டச்சத்தின் ஒருவகையாகும். இது விழித்திரை மற்றும் கண்களின் மற்ற பாகங்கள் நன்றாக செயல்பட உதவுகிறது.


பீட்டாகரோட்டின் மட்டுமல்ல, வேறு பல வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகளும் கண்களின் ஆரோக்கியத்துக்கு அவசியமானவை. வைட்டமின் ஏ, பார்வை இழப்பை தடுக்கிறது. வைட்டமின் சி, கண்களுக்குள் ஏற்படும் நீர் அழுத்தமான குளூக்கோமா பாதிப்பை தடுக்கிறது.


அல்மாண்ட், சூரியகாந்தி விதைகள், வேர்க்கடலை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு மற்றும் பீநட் பட்டர் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் இ, ஃப்ரீ ராடிகல்ஸ் என்னும் நிலையற்ற அணுக்கள் நம் உடலின் செல்களை, கண்களின் செல்களை பாதிக்காமல் பாதுகாக்கிறது. வைட்டமின் சி மற்றும் கரோடினாய்டுகளுடன் வைட்டமின் இ சேர்ந்து செயல்பட்டு, வயோதிபத்தின் காரணமாக கண்களில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.


பிரெக்கோலி, ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு போன்றவற்றில் இருக்கும் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்ற தடுப்பானாக (ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்) செயல்படுகிறது. இது கண்புரை மற்றும் முதுமையின் காரணமாக கண்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்கிறது.


முட்டை, காரட் ஆகியவற்றில் உள்ள வைட்டமின் ஏ, மாலைக்கண் நோயை தடுக்கும். கண்கள் வறண்டுபோகாமல் பாதுகாக்கும். கண்களில் ஏற்படக்கூடிய சில பாதிப்புகளை இது குணப்படுத்தும்.
முட்டை, காளான், சிறுமீன்கள் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் டி சத்தும், முதுமையின் காரணமாக உருவாகக்கூடிய கண் பாதிப்புகளை தடுக்கிறது.
இந்த உணவுகளை சாப்பிட்டு கண்களை காத்துக்கொள்வோம்.

You'r reading பார்வை திறனை பாதுகாக்க எவற்றை சாப்பிடவேண்டும் தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை