அட்டகாசமான அசத்தலான ஏழைப்பழம் தெரியுமா?

பேரிக்காய் கண்டாலே ஏளனமான பார்வை. ஆப்பிள்த் தான் ஒஸ்தி இது வேஸ்ட் என்று நினைத்து கொண்டவர்கள் இனி இப்படி நினைக்கமாட்டீர்கள். ஆப்பிளை விட மேலானது விலை குறைந்ந கனி இது. இவற்றின் நன்மைகளைப் பார்ப்போம்.

பேரிக்காய் நம் உடலின் கழிவுகளை நீக்கி சுத்தம் செய்வதில் பெரும் ஆற்றல் கொண்டது. சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இதுதான்  மிகச்சிறந்த கனி.

சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் என நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமாக உள்ள பழம் இது.

பேரிக்காயில் வளரும் குழந்தைகளுக்கு தேவையான சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் நிறைந்துள்ளன. எனவே தினமும் இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள்.

இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.

கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து.

தினமும் பெண்கள் காலையிலும் மாலையிலும் 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.

உண்ணும் உணவின் அலர்ஜி காரணமாக சிலருக்கு வயிற்றுப் போக்கு உண்டாகும். எனவே தினமும் பேரிக்காய் ஒன்று சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நீங்கும்.

இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றைப் உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.

READ MORE ABOUT :