தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் ஒடிசா மாநிலம் கோபல்பூரிலிருந்து 720 கிலோமீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. லூபன் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் ஓமன் அருகே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லூபன் புயல் எச்சரிக்கை தொடர்ந்து, சென்னை, கடலூர், நாகை, காரைக்கால் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழக கடல் பரப்பில் கடற் காற்று வேகமாக வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒன்றாம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை என்பது, புயல் உருவாகி இருப்பதற்கான அடையாளமாகும்.