தமிழகத்தில் சுமார் ஒரு மணி நேரமாக பாதிக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் சேவை மீண்டும் சீரடைந்தது.
மாநிலம் முழுவதும் அவசர மருத்துவ உதவி ஆம்புலன்ஸ் சேவைக்கு 108 எண் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையான சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் 1000 ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு சுமார் ஒரு மணி நேரம் 108 சேவை பாதிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து, மாற்று ஏற்பாடாக 044 40170100 என்ற தற்காலிக எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு 108 சேவை பாதிப்பு சீரடைந்தது.