பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க வியூகம் வகுத்து நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார் அமித்ஷா. அவருக்கு காய்ச்சல் அதிகமாகி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், அமித்ஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது சோதனைகளில் தெரியவந்துள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.