கொல்கத்தா பேரணி: மு.க.ஸ்டாலினை வரவேற்று திரிணாமுல் டிவீட்!

Tirunamul Congress welcomes MK Stalin for March through Tweet

by Nagaraj, Jan 19, 2019, 11:10 AM IST

கொல்கத்தாவில் எதிர்க் கட்சிகளை ஒன்றிணைத்து மம்தா பிரமாண்ட பேரணியை இன்று நடத்துகிறார்.

இதில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை தனி விமானத்தில் டி.ஆர்.பாலு, மருமகன் சபரீசன் ஆகியோருடன் கொல்கத்தா சென்றார். மு.க.ஸ்டாலின் வருகைக்கு திரிணாமுல் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டரில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரித்திரப் புகழ் பேரணிக்கு வருகை தரும் அறிவாலயத்தின் தலைவரை வரவேற்கிறோம் என டிவிட்டரில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று கொல்கத்தாவுக்கு வருகை தந்துள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கும் திரிணாமுல் கட்சியின் சார்பில் டிவிட்டரில் வரவேற்பும், வாழ்த்தும் தனித்தனியே தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading கொல்கத்தா பேரணி: மு.க.ஸ்டாலினை வரவேற்று திரிணாமுல் டிவீட்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை