லோக்சபா தேர்தல்: தமிழகத்தில் திமுக கூட்டணி 39 இடங்களிலும் வெல்லும்- ஏபிபி- சிவோட்டர் பரபர கருத்து கணிப்பு

DMK will win 39 Seats in Loksabha Elections: ABP-CVoter Survey

by Mathivanan, Jan 25, 2019, 11:14 AM IST

வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியே 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என ஏபிபிசி- சிவோட்டர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏபிபிசி- சிவோட்டர் கருத்து கணிப்பு முடிவுகள்:

- லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 233 இடங்களைக் கைப்பற்றும். பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 272.

- காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 167 இடங்களைக் கைப்பற்றும்

- பாஜக மட்டும் 203 தொகுதிகளில் வெல்லும். காங்கிரஸ் கட்சிக்கு 109 இடங்கள் கிடைக்கும்.

- மாநில கட்சிகள் 130 இடங்களுக்கும் மேல் வெல்வதால் அக்கட்சிகளே அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும்.

- பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், டிஆர்எஸ் உள்ளிட்டவற்றின் ஆதரவு கிடைத்தால் மீண்டும் அக்கட்சியின் ஆட்சி தொடரும்.

- இடதுசாரிகள், திரிணாமுல் உள்ளிட்டவற்றின் ஆதரவு கிடைத்தால் காங்கிரஸ் கூட்டணிக்கு 257 இடங்கள் கிடைக்கும்.

- மாநிலங்களின் அடிப்படையில் உத்தரப்பிரதேசத்தில் 25, பீகாரில் 35, ராஜஸ்தானில் 18, மத்திய பிரதேசத்தில் 23, குஜராத்தில் 24, மகாராஷ்டிராவில் 16, ஒடிஷாவில் 12, மேற்கு வங்கத்தில் 7, கர்நாடகாவில் 14 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெல்லும்.

- காங்கிரஸ் கூட்டணியானது தமிழகத்தில் 39, கர்நாடகாவில் 14, ஜார்க்கண்ட்டில் 8, மகாராஷ்டிராவில் 28, ராஜஸ்தானில் 7, ம.பியில் 6, பஞ்சாப்பில் 12 இடங்களில் வெல்லுமாம்.

You'r reading லோக்சபா தேர்தல்: தமிழகத்தில் திமுக கூட்டணி 39 இடங்களிலும் வெல்லும்- ஏபிபி- சிவோட்டர் பரபர கருத்து கணிப்பு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை