அன்னியச் செலாவணி மோசடி குற்றச்சாட்டு- பாக்.பாடகருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்!

ED issues notice to Pak singer Rahat Fateh Ali Khan

by Nagaraj, Jan 30, 2019, 12:05 PM IST

அந்நியச் செலாவணி மோசடிக் குற்றச்சாட்டில் பாகிஸ்தான் பாடகர் ரஹத் அலிகானுக்கு மத்திய அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ரஹத் பாலிவுட் படங்களில் பிரபலமான பாடகர். கடந்த 2003-ல் வெளிவந்த பாப் படத்தின் பாடல்கள் மூலம் புகழ் பெற்றவர். மேலும் சினிமா தொடர்பான டி.வி.ஷோக்களிலும் பங்கேற்று பெரும் பணம் சம்பாரித்து அதனை மோசடியாக பாகிஸ்தானுக்கு கொண்டு சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதனால் அவர் மீது அந்தியச் செலாவணி மோசடி சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே கடந்த 2011-ல் பெருமளவிலான வெளிநாட்டு கரன்சிகளுடன் பாகிஸ்தானுக்கு செல்ல முயன்ற போது டெல்லி விமான நிலையத்தில் ரஹத் கைது செய்யப்பட்டு அந்நியச் செலாவணி மோசடி வழக்கு தொரடப்பட்டது. தற்போது இரண்டாவது தடவையாக அமலாக்கத்துறையிடம் சிக்கியுள்ளார்.

You'r reading அன்னியச் செலாவணி மோசடி குற்றச்சாட்டு- பாக்.பாடகருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை