மத்திய பட்ஜெட் : நாளை மறுநாள் இடைக்கால பட்ஜெட்டாக இல்லாமல் ஓராண்டுக்கான முழு பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும் என்ற மத்திய பாஜக அரசின் முடிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பொதுவாக தேர்தல் ஆண்டில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதே மரபாக இருந்து வருகிறது.இந்த ஆண்டும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்ற நிலையில், அடுத்த நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி நாளை மறுதினம் (பிப் 1-ந்தேதி) மத்திய நிதியமைச்சர் பியூஸ் கோயல் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
பாஜக அரசு முழு பட்ஜெட் தாக்கல் செய்வது மரபை மீறும் செயல் என காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக அரசு இதுவரை கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தேர்தல் தோல்வி பயத்தில், பட்ஜெட்டில் ஏராளமான வெற்று வாக்குறுதி, சலுகைகள் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டே. பாஜக அரசு மரபுகளை மீறுகிறது என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த முழு பட்ஜெட் முடிவால் வருமான வரிச்சலுகை, இலவச அறிவிப்புகள் என ஏராளமான சலுகைகளை மோடி அரசு அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.