மத்திய பட்ஜெட் தாக்கல் - பிரதிகளை மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்திய டெல்லி போலீஸ்!

by Nagaraj, Feb 1, 2019, 10:43 AM IST
Share Tweet Whatsapp

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது எம்பிக்களுக்கு வழங்க கொண்டு வரப்பட்ட பட்ஜெட் பிரதிகளின் பார்சல்களை மோப்ப நாய் கொண்டு டெல்லி போலீசார் சோதித்தனர்.

பாஜக அரசின் பதவிக்காலம் முடிவடைய நிலையில் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் உரை மிகமிக ரகசியமாகவும், பாதுகாப்பாகவும் தயாரிக்கப்படும். பட்ஜெட் உரையை வாசிக்கும் போது தான் அதன் பிரதிகள் எம்பிக்களிடம் வழங்கப்படும் என்பதால் பெரிய, பெரிய பார்சல்களில் சீலிட்ட பட்ஜெட் பிரதிகள் நாடாளுமன்ற வளாகத்துக்கு பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. பார்சல்களை மோப்ப நாய் கொண்டும் போலீசார் சோதனை நடத்தினர்.

 


Leave a reply