பெங்களூரு புறநகர் பகுதியில் மிராஜ் 2000 ரக அதிநவீன போர் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததில் 2 விமானிகள் பலியாகினர்.
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிராஜ் 2000 ரக விமானம் ஒன்று பெங்களூரு இந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவனத்தில் அதிக நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டது.
பின்னர் இன்று காலை 2 விமானிகளுடன் சோதனை ஓட்டமாக பறந்தது. பறந்த சில நிமிடங்களிலேயே விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து கரும்புகை மூட்டம் எழுந்தது.
இந்த விபத்தில் விமானி ஒருவர் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிந்ததாகவும், மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
You'r reading பெங்களூருவில் மிராஜ் போர் விமானம் விழுந்து தீப்பிடித்தது - விமானிகள் 2 பேரும் உயிரிழந்த சோகம்! Originally posted on The Subeditor Tamil