சாரதா சிட்பண்ட் ஊழல் தொடர்பான ஆவணங்களை கொல்கத்தா காவல் ஆணையர் அழித்து விட்டார். விசாரணைக்கும் ஒத்துழைக்க மறுக்கிறார் என உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா நகர காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் சிபிஐ விசாரணை நடத்த முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவுமுதல் மே.வங்க முதல் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சாரதா சிட்பண்ட் ஊழல் தொடர்பாக பலமுறை சம்மன் அனுப்பியும் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் ஆக ராகவில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதுடன் ஏராளமான ஆவணங்களையும் அழித்துவிட்டார். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல் படி சிபிஐ விசாரணைக்கு மாநில அரசும் ஒத்துழைக்காமல் போலீசை வைத்து தடுக்கிறது. எனவே விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க மே.வங்க அரசுக்கும், ராஜீவ் குமாருக்கும் உத்தரவிடக் கோரிசிபிஐ தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
இதனை விசாரித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ஆவணங்களை ராஜீவ் குமார் அழித்ததற்கான ஆதாரங்களை சமர்ப்பியுங்கள். அவர் வருத்தப்படும்படியாக நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார்.