சிபிஐ நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சாரதா சிட்பண்ட் ஊழல் விசாரணைக்காக கொல்கத்தா நகர காவல் ஆணையர் ராஜீவ்குமார் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்த முயன்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மே.வங்கத்தில் தமது அரசைக் கலைக்க பாஜக சதி செய்கிறது. சிபிஐ-ஐ ஏவி விடுகிறது என குற்றம்சாட்டி மமதா நேற்று இரவு முதல் சத்யாக்கிரகம் நடத்தி வருகிறார்.
சிபிஐ நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, மம்தாவின் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்று காலை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ்,திரிணாமுல், தெ.தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் இந்தப் பிரச்னையை எழுப்பி கடும் ரகளையில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஓத்தி வைக்கப்பட்டன.