நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆக்லாந்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.இந்தியத் தரப்பில் குருணால் பாண்ட்யா அபாரமாக பந்து வீசி 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய தொடக்க வீரர்கள் ரோகித்தும் தவானும் அதிரடி காட்டினர். ரோகித் 29 பந்துகளில் 50 ரன் எடுத்து அவுட்டானார். தவான் 30 ரன்களிலும், சங்கர்14 ரன்கள் எடுத்தும் அவுட்டாகினர்.
தோனி (19), ரிஷாப் பாண்ட் (40) இருவரும் ஜோடி சேர்ந்து அவுட்டாகாமல் வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர். 18.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு இந்தியா 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் முதல் போட்டியில் நியூசிலாந்திடம் பெற்ற தோல்விக்கு பழி தீர்த்து 3 போட்டி தொடரை சமன் செய்துள்ளது. 3வது போட்டியில் வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.