இந்தியாவின் வேண்டுகோளை நிராகரித்து பாகிஸ்தானுக்கு சவூதி இளவரசர் பயணம் -10பில்லியன் டாலர் நிதியுதவியும் வாரி வழங்குகிறார்!

by Nagaraj, Feb 17, 2019, 15:40 PM IST
Share Tweet Whatsapp

காஷ்மீரின் புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள பாகிஸ்தானை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் என இந்தியா விடுத்த வேண்டுகோளை நிராகரித்து, அந்நாட்டுக்கு சவூதி இளவரசர் இன்று பயணம் மேற்கொண்டுள்ளார்.பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு 10 பில்லியன் டாலர் நிதி உதவியும் வழங்குகிறது சவூதி அரேபியா.

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் தீவிரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தான் செயலை கண்டித்து அந்நாட்டை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் என்று இந்தியா வேண்டுகோள் விடுத்தது.

ஆனால் 40 பேர் வீர மரணம் எய்த ரத்தம் காயும் முன்னே பாகிஸ்தானுக்கு சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மான் இன்று பாகிஸ்தான் சென்றுள்ளார்.பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி மூச்சுத் திணறும் வேளையில் அந்நாட்டுக்கு புத்துயிர் கொடுப்பதாகக் கூறி 10 பில்லியன் டாலர் நிதியையும் தாராளமாக வாரி வழங்குகிறார் சவூதி இளவரசர்.

சவூதி போன்று சீனாவும் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Leave a reply