சென்னை: தான் பயன்படுத்தும் புதிய காரின் பதிவெண்ணில் சி.எம் என்ற எழுத்துக்கள் இடம்பெற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வளம் வருகிறார். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சி.எம். என்ற எழுத்துகளுடன் கூடிய பதிவெண் கொண்ட புதிய காரை பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். அவரது புதிய வாகனத்தின் பதிவெண்ணில் சிஎம் என்ற ஆங்கில எழுத்துகள் வருகிறது.
முதலமைச்சர் என்று பொருள் வரும்படியான பதிவெண்ணை முதலமைச்சருக்காக பிரத்யேகமாக மோட்டார் வாகன போக்குவரத்து துறை அதிகாரிகள் ஒதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புதிய காரின் பதிவெண் TN 07 CM 2233 என்று உள்ளதால், அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.