2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.
தெற்காசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சவூதி இளவரசர் சல்மான் 2 நாள் பயணமாக நேற்றிரவு டெல்லி வந்தார். அவரை மரபுகளை மீறி விமான நிலையத்திற்கு சென்று பிரதமர் மோடி வரவேற்றார். இன்று சவூதி இளவரசருக்கு ஜனாதிபதி விருந்தளித்து உபசரிக்கிறார். இதற்கு ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த சவூதி இளவரசரை ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் சல்மானை வரவேற்று உபசரித்தனர். இந்தியாவுடனான சவூதி அரேபியாவின் தொடர்பு என்பது இரு நாட்டு மக்களின் மரபணுவுடன் தொடர்புடையது என்ற சவூதி இளவரசர், தற்போதைய நட்பு வரும் காலங்களில் மேலும் வலுப்பெறும் என்று தெரிவித்தார்.