காஷ்மீர் மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசு மற்றும் 10 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் ராணுவத்தினர் மீது அண்மையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 44 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஆங்காங்கே காஷ்மீரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இவ்வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசு மற்றும் 10 மாநிலங்கள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.