இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு அவசரமாகக் கூடி ஆலோசனை நடத்தியது.
பிரதமர் மோடியின் இல்லத்தில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத்தோவல் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது குறித்தும், மேற் கொண்டு ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் பிரதமர் மோடி அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.