பட்டா இல்லாத வனவாசிகளை காடுகளை வெளியேற்றும் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
காடுகளில் நில உரிமம் இல்லாமல் வசிக்கும் பல லட்சம் வனவாசிகளான ஆதிகுடி மக்களை காடுகளை வெளியேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 13-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது. இது ஆதிகுடி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மேலும் 21 மாநில் அரசுகள் இது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்ஹா பெஞ்ச், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்தது. மேலும் வனவாசிகளை காடுகளை வெளியேற்றும் நடவடிக்கைக்கும் தடை விதித்து உத்தரவிட்டது.
பிர்சா முண்டா.. 'முண்டாசு’ தட்டும் கோபி நயினார்- ரஞ்சித் ஆதரவாளர்கள்