பாஜகவில் பிரதமர் பதவிக்கான போட்டியில் தாம் இல்லை என்றும் இப்போதும், எப்போதும் மோடி தான் பிரதமர் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
பாஜகவில் பிரதமர் பதவியை குறிவைத்து நிதின் கட்கரி காய் நகர்த்துவதாக தகவல்கள் வெளியாகின.ஆர்எஸ்எஸ்சும் கட்கரியை பிரதமராக்க விரும்புகிறது என்றும் கூறப்பட்டது. அதற்கேற்ப நிதின் கட்கரியும் வேலை இல்லா திண்டாட்டம், 3 மாநிலங்களில் பாஜகவின் தோல்வி குறித்து பிரதமர் மோடியை விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கினார் கட்கரி.
இந்நிலையில் இன்று மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய கட்கரி, பிரதமருக்கான போட்டியில் நான் இல்லை. மோடி தான் இப்பொழுதும் பிரதமர் .அடுத்தமுறையும் அவர் தான் பிரதமர். அடிப்படையில் ஆர்எஸ்எஸ் காரனான நான் கடைசி வரை நாட்டின் சேவகனாக மோடியின் தலைமையின் கீழ் பணியாற்றுவேன் என்று கட்கரி தெரிவித்துள்ளார்.
கங்கை நதியை சுத்தப்படுத்தப்படும் பணியில் தீவிரம் காட்டப் போவதாகவும், அடுத்த 13 மாதங்களில் கங்கை நதி தூய்மையாகிவிடும் என்றும் கட்கரி தெரிவித்துள்ளார்.