இந்திய பிரதமர் மோடியின் ஆங்கில உச்சரிப்பு முறையை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிண்டல் செய்து வருவதாக அமெரிக்க செய்தி பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
சமீபகாலமாகவே அமெரிக்காவுடன் வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் சீரான உறவில் இருந்து வருகிறது. மேலும், பிரதமராக பதவியேற்ற பின் மோடி அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான நட்பு மேலும் வலுவடைந்தது.
இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த வருடம் ஜூன் மாதம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அந்நாட்டு அதிபர் ட்ரம்பை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அந்த சந்திப்பின் போது ஆப்கனில் அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், வாஷிங்டன் போஸ்ட் பத்திரைக்கை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்திய பிரதமர் மோடியின் ஆங்கில உச்சரிப்பு முறையை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிண்டல் செய்து வருவதாக தெரிவித்துள்ளது.
ஒருநாட்டு பிரதமரின் பேச்சை கேலி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ஆங்கில உச்சரிப்பை டிரம்ப் கேலி செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் சர்ச்சையாகியுள்ளது.