காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமான உ.பி பாஜக பெண் எம்.பி - சமாஜ்வாதி மூத்த தலைவரும் தாவல்!

UP BJP women MP joined in Congress

by Nagaraj, Mar 3, 2019, 11:00 AM IST

உத்தரப் பிரதேசத்தில் பாஜக பெண் எம்.பி ஒருவரும், சமாஜ்வாதி மூத்த தலைவர் ஒருவரும் ராகுல் காந்தி, பிரியங்கா முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.

உ.பியில் கிழக்குப் பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா நியமனம் செய்யப்பட்டது முதல் அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் படு உற்சாகமாக உள்ளனர். பகுஜன், சமாஜ்வாதி, பாஜக தொண்டர்களும், நிர்வாகிகளும் காங்கிரசில் இணைந்து வருகின்றனர்.

உ.பி. கிழக்குப் பகுதியில் உள்ள பஹாரியா தொகுதி பாஜக பெண் எம்.பி. சாவித்ரி புலே அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். தலித் தலைவரான சாவித்திரி பாஜகவில் தலித்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதே போன்று பதேபூர் முன்னாள் எம்.பியும், சமாஜ்வாதி மூத்த தலைவருமான ராகேஷ் சச்சன் என்பவரும் காங்கிரசில் இணைந்துள்ளார்.பதே பூர் தொகுதியை எதிர்பார்த்திருந்த சச்சனுக்கு, அந்தத் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தியில் காங்கிரசில் இணைந்துள்ளார்.

உ.பி. கிழக்குப் பகுதியில் தலித் வகுப்பைச் சேர்ந்த இரு தலைவர்களும் இணைந்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு மேலும் வலிமை ஏற்படுத்தும் என்று கூறி அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

You'r reading காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமான உ.பி பாஜக பெண் எம்.பி - சமாஜ்வாதி மூத்த தலைவரும் தாவல்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை