மே.வங்க மாநிலம் ஹவுரா - டெல்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் விடப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பொன்விழா கொண்டாடப்பட்டது. ரயில் பயணம் மேற்கொண்ட பயணிகளுக்கு ரோஜாப்பூ ,கேக், வாழ்த்து அட்டை என சிறப்பான உபசரிப்பு செய்து ரயில் நிர்வாகம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
ஹவுரா - டெல்லி இடையே கடந்த 1969-ம் ஆண்டு நாட்டிலேயே முதன்முறையாக ராஜ்தானி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. ரயில் விடப்பட்டு 50ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஹவுராவில் ரயிலை அலங்கரித்து கேக் வெட்டி பொன்விழா கொண்டாடப்பட்டது.
நேற்றிரவு டெல்லி புறப்பட்ட ரயிலில் பயணித்த பயணிகளுக்கு வாழ்த்து அட்டையுடன் ரோஜாப்பூ , கேக் கொடுத்து ரயில்வே ஊழியர்கள் சிறப்பு உபசரிப்பு செய்தனர். மேலும் டெல்லி செல்லும் வரை பயணிகளைத் தேடித் தேடி வந்து அவர்களின் தேவைகளை நிறைவு செய்ததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்