வங்கிக் கணக்கு, சிம் கார்டுகளுக்கு ஆதார் கட்டாயம் - மத்திய அரசு அவசர சட்டம்

Aadhaar compulsory for bank account, SIM card, President approved for bill

by Nagaraj, Mar 4, 2019, 10:07 AM IST

வங்கிக் கணக்கு தொடங்கவும், சிம் கார்டுகள் வாங்குவதற்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்ற மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆதார் அட்டையை அனைத்து திட்டங்களுக்கும் கட்டாயப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்து மக்களவையில் நிறைவேற்றியது. ஆனால் ராஜ்யசபாவில் நிறைவேற்றும் முன் கூட்டத் தொடர் முடிவுக்கு வந்துவிட்டது.

இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த அவசரச் சட்டத்திற்கு ஒப்புதழ் வழங்கி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று கையெழுத்திட்ட நிலையில் அவசரச் சட்டம் அமலுக்கு வந்தது. இதனால் இனிமேல் வங்கிக் கணக்கு தொடங்க, புதிதாக சிம் கார்டு வாங்க ஆதார் அட்டை கட்டாயமாகிறது.

You'r reading வங்கிக் கணக்கு, சிம் கார்டுகளுக்கு ஆதார் கட்டாயம் - மத்திய அரசு அவசர சட்டம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை