காங்கிரசின் முதல் வேட்பாளர் பட்டியல் - ரேபரேலி தொகுதியில் சோனியா, அமேதி தொகுதியில் ராகுல்

Congress releases first list of candidates for 2019 polls

by Sasitharan, Mar 7, 2019, 22:50 PM IST

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள முதல்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் தேதிஇன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் தேர்தல் ஆணையம் இறுதி கட்ட தேர்தல் ஆயத்தப் பணியை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் வேட்பாளர்கள் தேர்வு, பிரச்சாரங்கள், தொகுதி பங்கீடு, கூட்டணி விஷயங்களை இறுதி செய்வதில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 15 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, குஜராத் மாநிலத்தில் 4 வேட்பாளர்களையும், உத்திரபிரதேச மாநிலத்தில் 11 வேட்பாளர்களையும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

அதன்படி உ.பி.யின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். ஃபருக்காபாத் தொகுதியில் சல்மான் குர்ஷித் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் உத்திரபிரதேச மாநிலத்தின் ஃபர்ரூகாபாத் தொகுதியிலும், குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் பரத்சின்ஹ் எம். சோலான்கி ஆனந்த் தொகுதியிலும் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அக்பர்பூர் தொகுதியில் ராஜாராம் பால், ஜலால்வுன் தொகுதியில் பிரிஜ் லால் காப்ரி, பைசாபாத் தொகுதியில் நிர்மல் காத்ரி, குஷி நகர் தொகுதியில் ஆர்.பி.என்.சிங் ஆகியோரும் போட்டியிடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பாஜகவை முந்திக்கொண்டு காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You'r reading காங்கிரசின் முதல் வேட்பாளர் பட்டியல் - ரேபரேலி தொகுதியில் சோனியா, அமேதி தொகுதியில் ராகுல் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை