புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த சிஆர்பிஎப் படை வீரர்கள் 40 பேரின் குடும்பத்திற்கு தலா 1.01 கோடி நிதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த பிப் 14-ந் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகன அணிவகுப்பு மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய இந்த பயங்கரவாத சம்பவத்தில் பலியான வீரர்களுக்கு நாடே கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.
இந்தத் தாக்குதலில் வீர மரணம் அடைந்த 40 வீரர்களின் குடும்பத்திற்கு ரூ1.01 கோடி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பணியின் போது இறப்பு, பணிக் காலத்திற்கான ஊதியம், காப்பீட்டுத் தொகை, வீரதீரச் செயலுக்கான நிதி என ஒட்டு மொத்தமாக கணக்கிட்டு தலா ரூ1.01 கோடி வழங்கப் படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.