மும்பையில் ரயில்வே நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததது. இடிபாடுகளில் இருந்து நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இருபதுக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள நடை மேம்பாலத்தில், பயணிகள் நெரிசல் அதிகமாக இருந்த, இரவு 7:30 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. திடீரென சத்தத்துடன், நடை மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது; இதை சற்றும் எதிர்பாராத பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
எனினும் இடிபாடுகளில் பலர் சிக்கினர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுவரை 4 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 23 காயமடைந்ததாக மும்பை காவல்துறையினர் தெரிவித்தனர்.
காயமடைந்த சிலரி நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.