சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ்

by Sakthi, Mar 14, 2019, 20:30 PM IST

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்துக்கான நடிக-நடிகைகள் தேர்வு தற்பொழுது நடந்துவருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து தற்பொழுது இன்றுநேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் படத்தில் நடித்துவருகிறார் சிவகார்த்திகேயன். பெரிய பட்ஜெட்டில் தயாராவதால் நீண்ட நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்தவிருக்கிறார்கள். அதனால் நடுவே இரும்புத்திரை பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ என்கிற படத்தில் நடிக்கவிருக்கிறார் சிவா. இப்படத்துக்கான படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த மார்ச் 13ல் தொடங்கியது.

இப்படத்தைத் தொடர்ந்து சன்பிக்ஸர் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவிருக்கும் செய்தி சமீபத்தில் வைரலானது. ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா படத்தில் நடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதனால் மீண்டும் சிவகார்த்திகேயன் படம் என்பதால் தைரியமாக ஓகே சொல்லிவிட்டாராம். மற்றுமொரு தகவல் என்னவென்றால், சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவில் மெரினா படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் பாண்டிராஜ். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவா - பாண்டிராஜ் கூட்டணி இணைவதும் குறிப்பிடத்தக்கது.


More Cinema News