பேருந்து கட்டணம் குறைத்து தமிழக அரசு அறிவிப்பு

Advertisement

சென்னை: பேருந்து கட்டண உயர்ந்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்துவந்த நிலையில், பேருந்து கட்டணத்தை சற்று குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு கடந்த 19ம் தேதி பேருந்து கட்டணத்தை உயர்த்த அறிவித்தது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல்வேறு கட்சிகளும் இதற்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தது.
மேலும், ஆங்காங்கே கல்லூரி மாணவர்கள், பொது மக்கள், கட்சியினர் என தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில், பேருந்து கட்டணத்தை சற்று குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 60 பைசாவில் இருந்து 58 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், விரைவு பேருந்துகளில் சிலோ மீட்டருக்கு 80 பைசாவில் இருந்து 75 பைசாவாகவும், சொகுசு பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 90 பைசாவில் இருந்து 85 பைசாவாகவும், அதிநவீன சொகுசு பேருந்துகளில் கி.மீக்கு 110 பைசாவில் இருந்து 100 பைசாவாகவும், குளிர்சாதன பேருந்துகளில் கி.மீக்கு 140 பைசாவில் இருந்து 130 பைசாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை நகர மற்றும் மாநகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆக இருந்த நிலையில் ரூ.4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச கட்டணம் ரூ.23ல் இருந்து ரூ.22 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மாவட்டங்களில் நகர மற்றும் மாநகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ.4க்கும், அதிகபட்ச கட்டணமாக ரூ.19ல் இருந்து ரூ.18க்கும் குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>